ஏகே 62 – படத்தின் தலைப்பு இது தானா ? நல்லா தான இருக்கு !

  • February 25, 2023 / 10:40 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் கடந்த மாதம் வெளியானது . இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தனது 62 -வது படத்தில் நடிக்க உள்ளார் என்று 8 மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் விக்னேஷ் சொன்ன கதை லைக்கா நிறுவனத்திற்கும் நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் விக்னேஷ் சிவன் – அஜித் படம் உருவாகவில்லை . அஜித் விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார் என்று கூறப்படுகிறது .

மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் விரைவில் படக்குழு ஏகே 62 பட அறிவிப்பை வெளியிட உள்ளது. மார்ச் மாதத்தில் 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், 120 நாட்களிலேயே படத்தை எடுத்து முடிக்க திட்டம் தீட்டியுள்ளார்களாம். இதனால் இந்த வார இறுதிக்குள் ஏகே 62 பட அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .

மேலும் சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அனிருத்தை லைக்கா நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது என்ற கூறப்படுகிறது .

இந்நிலையில் அஜித் 62 படத்தின் தலைப்பு டெவில் என்று இணையத்தில் நெட்டிசன்களால் கூறப்பட்டு வருகிறது . ஆனால், இது உண்மையில்லை வெறும் வதந்தி என்றும் மகிழ் திருமேனி தன்னுடைய படங்களுக்கு தமிழில் தான் தலைப்பு வைப்பார் என்றும் தெரியவந்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus