ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இது தான் தலைப்பா ?
May 30, 2022 / 06:27 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் . 1993-ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் . இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார் . காதலன் , இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் என் அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தார் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 2.o . இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது .இதனை தொடர்ந்து இந்தியன் 02 படத்தை இயக்கி வந்தார் . இந்த நிலையில் இந்தியன் 02 படப்பிடிப்பு பல காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது .
இதனை தொடர்ந்து நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தை பற்றி ராம் சரண் சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தார்.ஷங்கர் சார் எல்லாவற்றையும் மிகக் கச்சிதமாக திட்டமிட்டுள்ளார். 60 நாட்களை மிகச் சிறப்பாக படப்பிடிப்பை முடித்துள்ளார் . நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து உள்ளேன் . பல வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருக்கிறேன் என்றும் ராம் சரண் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு “அதிகாரி ” என தலைப்பு வைத்து இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் நம்பப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.