ரஜினியை காப்பி அடித்த விஜய் !

  • January 7, 2023 / 09:25 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது .

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் விஜய் பேசும் ‘ மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும் போது யோசிச்சு கொடுக்கணும் ஏன் சொல்லு நீ எத கொடுத்தாலும் அத நான் ட்ரிபிளா கொடுப்பேன் ‘ என்ற வசனம் ஏற்கனவே ரஜினி பேசிய வசனத்தை உல்டா செய்து விஜய் பேசியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .

ரஜினி பேசிய வசனத்தின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus