வாடிவாசல் படத்தின் ஷூட் எப்போ ?

  • September 2, 2022 / 09:08 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்தார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது . தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது .

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ் .தாணு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் . நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு வீரர்களுடன் பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது . இந்நிலையில் வெற்றிமாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் . வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது மேலும் 2024 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus