யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு !

  • December 6, 2022 / 12:35 AM IST

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு . எளிய மக்கள் தொடங்கி பெரிய பெரிய சினிமா நட்சித்திரம் வரை அனைவருக்கும் பிடித்த நடிகனாக வடிவேலு திகழ்கிறார் . சில காலம் தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த வடிவேலு தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் .

நடிகர் வடிவேலு நகைச்சுவை , குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து இருப்பதை நாம் அறிவோம் ஆனால் தற்போது இவர் வில்லன் பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் தான் வடிவேலு வில்லனாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது .

நடிகர் சந்தானத்தை வைத்து ” தில்லுக்கு துட்டு “திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராம்பாலாதான் இந்தப் புதிய படத்தை இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது . நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus