வடிவேலு தான் மாமன்னன் படத்தின் நாயகனா ?

  • July 7, 2022 / 10:10 AM IST

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி என்கிற படம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்தது . இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் உதயநிதி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் .

இந்நிலையில் மாமன்னன் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது . இதனை கேக் வெட்டி நிறைவு செய்துள்ளனர் . தற்போது மாமன்னன் படத்தில் வடிவேலு தான் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . படத்தில் வடிவேலு தான் மாமன்னன் என்றும் வடிவேலுவின் மகன் தான் உதயநிதி என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus