• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தெலுங்கு படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு ?

தெலுங்கு படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு ?

  • April 6, 2022 / 12:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தெலுங்கு படத்தை இயக்குகிறாரா  வெங்கட் பிரபு ?

தமிழ் நடிகர்கள் தெலுங்கு படம் நடிப்பது போல்,தமிழ் படங்களை மட்டும் இயக்கி கொண்டு இருந்த வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா, தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, ஸ்ரீநிவாஸா சில்வர் ஸ்கிரீன்ஸ் சார்பில் தயாரிக்கும், புதிய இருமொழி திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் புதிய அலை சினிமாவுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் வெங்கட் பிரவும் ஒருவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருடைய ஒவ்வொரு படத்திலும், அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகள், புதிதாக வரும் இயக்குனர்களுக்கு பெரும் நம்பிக்கையாக விளங்குகிறது. மங்காத்தா என்ற பெரும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு, தற்போது மாநாடு என்ற பெரும் வெற்றியுடன் வந்துள்ளார். மாநாடு திரைப்படதின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில், மன்மதலீலை என்ற படத்தோடு துரிதமாக வந்தார். குறுகிய காலகட்டத்தில் உருவான இந்த படம், அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படமாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்து 15 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், நாகசைதன்யா உடன் அவர் இணையும் இருமொழி படத்தின் அறிவிப்போடு அவர் வந்திருக்கிறார்.

நாகசைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, “ Thank you” என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் வேளையில், அவர் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இது வெங்கட் பிரபுவின் 11 வது படம், தெலுங்கில் அவருக்கு முதல் படம்.

டோலிவுட்டில் தொடர்ந்து படங்களை எடுத்து வரும் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீநிவாஸா சில்வர் ஸ்கிரீன்ஸ், தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளது. அதில் ராம் பொதினேனி உடைய “ தி வாரியர்”, போயபட்டி ஶ்ரீனு-ராம் இணையும் படத்துடன் தற்போது வெங்கட் பிரபு – நாக சைதன்யா இணையும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஶ்ரீனிவாசா சித்தூரி படத்தினை தயாரிக்க, பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார்.

பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும், இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம், இப்படம் பெரிய பட்ஜெட்டில் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யாவின் திறமைக்கு தகுந்த படியும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இக்கதையை உருவாக்கியுள்ளார். முக்கியமான நடிகர்களும், பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களும் சேர்ந்து ஒரு கமர்சியல் எண்டர்டெயினராக, இப்படம் உருவாக்கப்படவுள்ளது.

பிரபலமான நடிகர், பிளாக்பஸ்டர் இயக்குனர் மற்றும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம் என அனைவரும் இணைந்து, ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு சிறந்த அனுபவத்தை தரவுள்ளனர்.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று செய்தி வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #is venkat prabhu going to direct Naga Chaitanya
  • #Naga Chaitanya
  • #Venkat Prabhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

Thalapathy 68 :  ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version