யுவன் ஷங்கர் ராஜாவை கிழட்டிவிட்ட வெங்கட் பிரபு

மாநாடு படத்தோட மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு சத்தமே இல்லாம ரொம்ப சீக்கிரமா இயக்குன படம் தான் மன்மதலீலை .
இந்த படம் இன்னைக்கு ரீலிஸ் ஆகியிருக்கு.

இந்த நிலையில வெங்கட் பிரபுவோட அடுத்த படத்த பத்தின செய்தியை தான் வெளியாகி இருக்கு. வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா அவர்களை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியுலும் வெளியாக இருக்கு. அதுமட்டும் இல்லாம வெங்கட் பிரபுவோட பெரும்பாலான படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர். ஆனா நாகார்ஜூனா நடிப்புல உருவாக உள்ள தன்னோட அடுத்த படத்துல யுவன் ஷங்கர் ராஜாவ கிழட்டி விட்டாராம் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபுவோட இந்த திடீர் முடிவுக்கு காரணம் இளையராஜா தான் சொல்றாங்க.
சமிபத்துல தான் கங்கை அமரனும் இளையராஜாவும் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒன்னு சேர்ந்தாங்க. அதானால இளையராஜா தன்னோட தம்பி மகன் இயக்கும் அடுத்த படத்துக்கு தானே இசையமைக்கலாம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார்.

இந்த படத்தோட அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கு.

Share.