ராஜா ராஜன் சோழனின் உண்மையான வரலாற்றை வெற்றிமாறன் இயக்க போகிறாரா ?

  • October 7, 2022 / 10:33 AM IST

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன் . 2007 -ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக இவர் அறிமுகமானார் . பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிடம் இவர் துணை இயக்குனராக பணியாற்றி இருந்தார் . பொல்லாதவன் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் ஆடுகளம் . இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது . இந்த படத்திற்கு வெற்றிமாறன் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது .

ஆடுகளம் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய விசாரணை , வடசென்னை , அசுரன் ஆகிய மூன்று படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது மேலும் பல விருதுகளையும் இவர் வென்றார் . இதனால் இவருக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய இடம் கொடுத்து உள்ளது . தற்போது இவர் நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார் .இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது . இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் . அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் நடிகர் வெற்றிமாறன் சமீபத்தில் ராஜா ராஜன் சோழன் பற்றி பேசிய கருத்து சர்ச்சை ஆனது . இவரது கருத்திற்கு இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆதரவு அளித்தார் . இந்நிலையில்
சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் ” தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார் என்றும் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும் என்று சீமான் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus