இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் . இதனால் மீண்டும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது . திருமணம் நடைபெற்ற நேரம் சரியில்லை என்று ஜோசியர் கூறியதால் மீண்டும் திருமணம் செய்ய நயன்தாரா முடிவு செய்துள்ளாராம்.
ஆனால், இது இரண்டாவது திருமணம் இல்லை என்றும் மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவன் தாலிகட்ட போகிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் ஏற்கனவே தோஷம் நீங்க முதலில் வாழை மரத்திற்கு தான் விக்னேஷ் சிவன் தாலி காட்டியுள்ளார். அதன்பின் இரண்டாவதாக தான் நயன்தாராவிற்கு தாலிகட்டினாராம். அதன்படி தற்போது மீண்டும் திருமணம் என்பதால் விக்னேஷ் சிவன் மூன்றாவது முறையாக தாலிகட்ட போகிறார் என கூறப்படுகிறது.