தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!
October 24, 2020 / 02:04 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். விஜய்யின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சில ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் திடீரென விஜய் சந்தித்திருப்பதால் இது அரசியல் காரணங்களுக்காக இருக்குமோ என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அந்தப் புகைப்படங்களை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
முதல் கட்டமாக திருச்சி, மதுரை மற்றும் குமரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே நடிகர் கமல் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று வதந்தி பரவி வருகிறது.