மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா வம்ஷி ?

  • February 8, 2023 / 09:56 AM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . தெலுங்கு மொழியில் பெரிதும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தெலுங்கு ரசிகர்களும் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பை தரவில்லை .

இந்நிலையில் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமான லியோ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு பிறகு விஜய் அட்லீ படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது . அதனை தொடர்ந்து மீண்டும் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus