உண்மையை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர் !

  • August 24, 2022 / 05:41 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மிருகம். இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்தது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது . இந்த படத்திற்கு வாரிசு என்ற தலைப்பு வைத்து விஜய் பிறந்த தினத்தன்று ரசிகர்களுக்கு அறிவித்தனர் .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது .
இது குறித்து பேசி உள்ள பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் ” தளபதி 67 படத்தில் நடிகை த்ரிஷா நடிப்பதற்கு விஜய் தான் காரணம் என்று கூறியுள்ளார் மேலும் சில வருடமாக திரிஷா தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இல்லை அதனால் விஜய்யிடம் த்ரிஷா வாய்ப்பு கேட்டு இருக்கிறார் என்றும் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து சிபாரிசில் தான் தளபதி 67 படத்தில் திரிஷா நடிக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus