அடுத்த ஆண்டு தொடங்கும் விஜய் சேதுபதியின் புதிய படம் !

  • November 21, 2022 / 12:23 AM IST

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருக்கும் அவரது 46 -வது படமான டி .எஸ் .பி படத்தை இயக்குனர் பொன் ராம் இயக்கி உள்ளார் இந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்து உள்ளார் . இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது .

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது . இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus