Thalapathy 68 : ‘தளபதி 68’ இந்த வில் ஸ்மித் படத்தின் ரீமேக்கா?… தீயாய் பரவும் தகவல்!

  • December 21, 2023 / 02:22 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘லியோ’ கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார், ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மைக் மோகன், ஜெயராம், லைலா, அஜ்மல், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படம் 2019-ஆம் ஆண்டு வில் ஸ்மித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜெமினி மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus