விஜய் படத்தில் விக்ரம் ? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ….!

  • January 27, 2023 / 01:01 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில தினங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது இதனை இருவருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர் . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது .

இந்நிலையில் தற்போது விஜய் 67 படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் அவர் முக்கிய வில்லன் கதாபாத்திரம் என்றும் சமூக வலைத்தளத்தில் செய்தி உலா வருகிறது . ஆனால் இதுவரை உறுதி செய்யப்படாத தகவலே ஆகும் . விரைவில் விஜய் 67 படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்ற அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus