தளபதியுடன் இணையும் புரட்சி தளபதி ?

  • November 2, 2022 / 11:24 AM IST

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் பீஸ்ட் . படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சில மாதங்களுக்கு சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்தது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் 6 வில்லன் கதாபாத்திரம் இருக்கிறது என்றும் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் , பாலிவுட் நடிகர் சஞ்சய் டட், கவுதம் வாசுதேவ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் தளபதி 67 படத்தில் புரட்சி தளபதி விஷால் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . இதனால் விஷால் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus