டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் இயக்குநர்கள் தேசிங் பெரியசாமி – சிபி சக்கரவர்த்தி படங்கள் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’-யின் ஃபைனல் ஷெடியூலின் ஷூட்டிங் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்போது, இன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) முதல் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங்கில் இஷா கோபிகரும், ஷரத் கெல்கரும் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Shooting at my shoot today 💪🏾 pic.twitter.com/yzY6uDY0Yz
— Isha Koppikar (@ishakonnects) December 7, 2020
Friends first and now Co-stars! Chennai are you ready for us! @SharadK7 pic.twitter.com/VQwwYVdhk4
— Isha Koppikar (@ishakonnects) December 6, 2020