தெலுங்கில் மூன்று படத்தை கைப்பற்றிய நடிகை !

நான் சிரித்தால், தமிழ் படம் 02 ,ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் .இவர் தமிழ் படங்களை தவிர்த்து தெலுங்கு , மலையாளம் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் .தீயா வேல செய்யணும் குமாரு , காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களிலும் இவர் நடித்து இருந்தார் .

கடந்த 2020ம் ஆண்டு வெளியான நான் சிரித்தாள் படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன் . சுந்தர் .சி இயக்கத்தில் வெளியான இந்த படம் இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஐஸ்வர்யா மேனனுக்கு அடுத்து அடுத்து பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக பட வாய்ப்பு வரவில்லை .

இந்த நிலையில் ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு பட உலகில் மூன்று படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . சமீபத்தில் நடிகர் அஜித் குமார் இயக்கத்தில் வெளியானது வலிமை படம் . இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது .இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டது . இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் கார்த்திகேயன் . இவர் தெலுங்கு பட உலகில் நாயகனாக நடித்து வருகிறார் .

இந்த நிலையில் நடிகர் கார்த்திகேயா அடுத்து நடிக்கும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் நிகில் நடிக்கும் அடுத்து படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் இவர் நடிக்கும் மூன்றாவது தெலுங்கு படம் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share.