ஆரம்பமாகும் பையா 2 ?

  • February 1, 2023 / 07:41 PM IST

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் . நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் முதன்மை பாத்திரத்தில் நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது . இந்த படத்திற்கு பெரிய பக்கபலமாய் திகழ்ந்தது இந்த படத்தின் பாடல் .

பையா படத்தின் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது . நடிகர் கார்த்தி , தமன்னா , இயக்குனர் லிங்குசாமி , இசையமைப்பாளர் தமன் என அனைவருக்கும் அவர்களது திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக இருக்கிறது .

இந்நிலையில் தற்போது பையா படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராக உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது . லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் ஆர்யா நாயகனாகவும் , நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது .

ஆனால் பையா 2 படத்தில் கார்த்தி இல்லாதது சற்று வருத்தமான செய்தியாகவே கார்த்தி ரசிகர்களுக்கு உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus