நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’-க்காக ஐஸ்வர்யா மேனன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • July 8, 2023 / 12:24 PM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நிகில் சித்தார்த்தா. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஸ்பை’. இப்படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

த்ரில்லர் படமான இதனை கேரி.பி.ஹெச் இயக்கியுள்ளார். இதில் முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா மேனன், சன்யா தாகூர், அபினவ் கோமதம், ஆர்யன் ராஜேஷ், மகரந்த் தேஷ்பாண்டே, சச்சின் கெடேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், கெஸ்ட் ரோலில் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி நடித்துள்ளார். இதனை ‘ED எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா மேனன் ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus