தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் அப்டேட் விரைவில்!

  • November 8, 2020 / 11:43 AM IST

தமிழில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், 2002 ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படவுலகிற்கு அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “பட்டாசு”. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் கொரோனா லாக்டவுனிற்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்”படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கு காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் மாறி மாறி ரகசியமாக ட்விட் செய்துள்ளார்கள். இது கண்டிப்பாக ஜகமே தந்திரம் திரைப்படத்தின் அப்டேட்தான் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த அப்டேட் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus