ஜெய் – வாணி போஜன் நடித்துள்ள ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ்… ரிலீஸானது கலகலப்பான ட்ரெய்லர்!

  • December 1, 2020 / 01:20 PM IST

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ’ என மூன்று தமிழ் படங்களும், ‘ட்ரிபிள்ஸ்’ என்ற தமிழ் வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸின் ட்ரெய்லரை வாணி போஜன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாருகேஷ் சேகர் இயக்கியுள்ள இவ்வெப் சீரிஸில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் விவேக் பிரசன்னா, ராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த சீரிஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற OTT தளத்தில் வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus