காலா, சில்லு கருப்பட்டி, ஜெய் பீம் போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் குறட்டையை மையமாக வைத்து இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் .
இப்படத்தை இயக்கி வரும் விநாயக் சந்திரசேகரன் படத்தை பற்றி பேசி உள்ளார் அதில் , “இது மனித உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாழ்க்கைப் படம். இது ஒரு ரோம்-காம், ஆனால் உணர்ச்சிகள் வேரூன்றி இருக்கும். முக்கிய கதாபாத்திரத்திற்கு குறட்டை தொடர்பான பிரச்சனைகள் இருப்பதால், அதில் பாடி ஷேமிங் நகைச்சுவை இருக்காது.
மீத்தா ரகுநாத் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். முறையே ஜெயந்த் சேதுமாதவன் மற்றும் பரத் விக்ரமன் கேமரா மற்றும் எடிட்டிங்கைக் கையாள்கின்றனர்,
மேலும் நடிகர் மணிகண்டன் இந்த படத்திற்கு தேர்வு செய்ய “நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். முதல் வரைவை முடித்தபோது, எல்லா கதாபாத்திரங்களுக்கும் நடிகர்களை மனதளவில் நிர்ணயித்திருந்தேன். மணிகண்டனின் மிகப் பெரிய ப்ளஸ் அவருடைய பக்கத்து வீட்டு பையன் போன்ற அவரது முக அமைப்பு என்றும் இயக்குனர் கூறி உள்ளார் .
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது .