ஜெயில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

  • June 16, 2020 / 01:28 PM IST

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து, அடுத்து வெளிவரவிருந்த திரைப்படம் “ஜெயில்”. இந்த படத்தில் ” காத்தோடு காத்தானேன்” என்ற பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி பாடியுள்ளனர். அந்த   ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

வெயில் அங்காடித்தெரு காவியத்தலைவன் ஆகிய வெற்றி படங்களை தந்த இயக்குனர் வசந்தபாலன்  அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம்  “ஜெயில்”.   தன்னோடு பணிபுரிந்த இசையமைப்பாளர்             ஜி.வி. பிரகாஷ் குமாரை நடிகராக  வைத்து  இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஜி.வி க்கு  ஜோடியாக எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்நிதி  நடித்துள்ளார்.

கிரிக்கீஸ்  சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும்  இந்தப்படத்தின்  படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. 2019ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற நிலையில்,  2020 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப்பட வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் யோகிபாபு ,ரோபோ சங்கர், ராதிகா சரத்குமார், சுதன்சு பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த “காத்தோடு”பாடலின் வரிகளை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும்  அதிதி ராவ் ஹைதாரி பாடியுள்ளனர். இது அதிதிக்கு தமிழில் வெளிவரும் முதல் பாடலாகும். தன் பிறந்தநாளன்று இந்தப்பாடலின்  டீசரை வெளியிட்ட ஜி .வி .பிரகாஷ் குமார் இந்த பாடலை தனுஷ் இன்று மாலை வெளியிடுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.  வெளிவந்த சில மணி நேரமே ஆன நிலையில் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கேட்ட பல ரசிகர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus