3 நாட்களில் ஜெய்யின் ‘தீராக் காதல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • May 30, 2023 / 10:27 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘தீராக் காதல்’ கடந்த மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.1.32 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus