• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » “வாரிசு இசை வெளியீட்டு விழா மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம்”… விஜய்யின் தோற்றத்தை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்!

“வாரிசு இசை வெளியீட்டு விழா மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம்”… விஜய்யின் தோற்றத்தை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்!

  • January 5, 2023 / 10:31 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“வாரிசு இசை வெளியீட்டு விழா மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம்”… விஜய்யின் தோற்றத்தை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவரின் புதிய படமான ‘வாரிசு’வை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இதற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 24-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் (ஜனவரி 1-ஆம் தேதி) சன் டிவியில் ஒளிபரப்பானது. தற்போது, பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது.

தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #james vasanthan
  • #james vasanthan criticises vijay's look in varisu audio launch
  • #varisu
  • #Vijay

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version