ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸானது ‘மழை மழை’ பாடல் டீசர்!
April 2, 2021 / 11:07 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.
இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி கங்கனா ரனாவத்தின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தின் ‘மழை மழை’ என்ற பாடலின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வருகிற ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
The time capsule to #Thalaivi’s superstar era has arrived. Get ready to be mesmerized by her aura! #ChaliChali#Mazhai Mazhai #Ilaa Ilaa song out tomorrow!
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.