சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சதா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மிகப் பெரிய ஹிட்டானது. அது தான் ‘ஜெயம்’. இந்த படத்தை மோகன் ராஜா இயக்க, ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் சதாவின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை சதாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி, டார்ச்லைட்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சதா நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.