தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பூமி . இந்த படம் நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமாக அமைந்தது . லட்சுமணன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியாகி இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு பூமி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெறவில்லை .
இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது .மேலும் “ஜன கண மன ” மற்றும் அகிலன் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார் . அகிலன் படம் முழுக்க முழுக்க இந்திய பெருங்கடலில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.
அகிலன் படத்தை தொடர்ந்து நடிகர் நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். . இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பற்றி பேசி உள்ளார் அதில் நடிகர் பாலகிருஷ்ணா டோலிவுட்டின் விஜயகாந்த் என்று தெரிவித்துள்ளார் மேலும் அவரின் சன்டை மற்றும் நடன காட்சிகளை கண்டு வியந்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் .