எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக நடித்த ‘ஜெயம்’ ரவி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 13, 2022 / 03:13 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு நடிகராக திரையில் மாஸ் காட்டுவதற்கு முன்பே, எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குநராக சினிமாவில் தன் முத்திரையை பதித்தார். முதல் படமே ‘தல’ அஜித்தை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். அது தான் ‘வாலி’. ‘வாலி’-க்கு பிறகு ‘குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை’ என தொடர்ந்து படங்கள் இயக்கினார்.

இதில் ‘நியூ, இசை, அன்பே ஆருயிரே’வில் ஒரு ஹீரோவாகவும் வலம் வந்து கெத்து காட்டினார் எஸ்.ஜே.சூர்யா. இப்படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குநர்கள் இயக்கிய ‘கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான், கடமையை செய்’ என தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

சமீபத்தில், எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸ் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-ல் ரிலீஸானது. இதனை ‘கொலைகாரன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியிருந்தார். இந்த சீரிஸுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2019-யில் ரிலீஸான தமிழ் படம் ‘கோமாளி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எஸ்.ஜே.சூர்யாவை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் எஸ்.ஜே.சூர்யாவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus