விஜய் சேதுபதிக்கு முரட்டு போட்டியாகும் ஜெயம் ரவி !

  • February 1, 2023 / 07:44 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன்னியின் செல்வன் . இந்த படம் மல்டி ஸ்டார் படமாக அமைந்து இருந்தது . இந்நிலையில் ஜெயம் ரவி கையில் தற்போது அரை டஜன் படங்களை வைத்துள்ளார் .

ஜெயம் ரவி வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படம் வெளியாக உள்ளது . இதனை தொடர்ந்து மார்ச் மாதம் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சைரன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது .
மேலும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது .

இதனை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் இந்த படமும் இந்த வருடம் வெளியாகும் என்று கூறப்படுகிறது . அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன கன மன படம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாக உள்ளது . அதனை தொடர்ந்து அதே இயக்குனருடன் இறைவன் என்ற படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார் இந்த வருடம் முழுக்க ஜெயம் ரவியின் படங்கள் வெளியாக ஆக உள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus