கோமாளி படத்திற்காக 18 கிலோ எடையை ஜெயம் ரவி எப்படி குறைத்தார் தெரியுமா ?

  • August 22, 2022 / 06:13 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பூமி . இந்த படம் நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமாக அமைந்தது . லட்சுமணன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியாகி இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு பூமி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெறவில்லை .

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது .மேலும் “ஜன கண மன ” மற்றும் அகிலன் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார் . அகிலன் படம் முழுக்க முழுக்க இந்திய பெருங்கடலில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

அகிலன் படத்தை தொடர்ந்து நடிகர் நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். . இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோமாளி படத்தில் உடல் எடையை குறைத்தது பற்றி பேசி உள்ளார் . அதில் இரண்டு வாரத்திற்கு கேரட் மற்றும் தக்காளியை மட்டும் சாப்பிட்டு உள்ளார் மேலும் பிளாக் காபி எப்போதாவது குடிப்பேன் என்று தெரிவித்து இருக்கிறார் . இவ்வாறு டயட் இருந்து இரண்டே வாரங்களில் 18 கிலோ எடையை குறைத்து இருக்கிறார் ஜெயம் ரவி .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus