தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. முதல் படத்துலேயே தன் நடிப்பால் அசரடித்து, ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அந்த படம் தான் ‘ஜெயம்’. ‘ஜெயம்’ ஹிட்டானதும் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’ என்ற படத்தில் நடித்தார். இதுவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதும், ‘ஜெயம்’ ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, அஹமத்தின் ‘ஜன கண மன’, கல்யாண கிருஷ்ணனின் ‘அகிலன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ஜெயம்’ ரவியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அடங்க மறு’. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் தங்கவேல் இதனை இயக்கியிருந்தார்.
இதில் ரவி ‘சுபாஷ்’ என்ற போலீஸ் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அழகம் பெருமாள், மைம் கோபி, சம்பத் ராஜ், பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.64 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.