அடேங்கப்பா… 3 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘அகிலன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • March 13, 2023 / 04:23 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2, இறைவன், அகிலன், சைரன்’ மற்றும் இயக்குநர் எம்.ராஜேஷ் படம் என 5 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘அகிலன்’ படம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதனன் ராவ், சிராக் ஜானி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.9.05 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus