‘ஜெயம்’ ரவிக்கு ‘ டீம் கொடுக்கப்போகும் பர்த்டே கிஃப்ட்!
August 20, 2020 / 01:55 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு ‘பூமி’ படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’-ஏ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. அது படத்தின் ட்ரெய்லர் அல்லது பாடல்கள் ரிலீஸா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறாராம்.
We are excited to share the Exclusive stills from @actor_jayamravi ’s most expected #Bhoomi! Something Spl there in 20 Days! Stay Tuned #JR25
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.