‘ஜெயம்’ ரவி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல்!
September 10, 2020 / 12:05 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 10-ஆம் தேதி) ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு ‘பூமி’ படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘தமிழன் என்று சொல்லடா’-வை தயாரிப்பு நிறுவனம் ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் ‘ஜெயம்’ ரவி ஃபேன்ஸுக்கு சூப்பரான பர்த்டே ட்ரீட்டாக அமைந்தது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை ‘ராக்ஸ்டார்’ அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறாராம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.