தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் (அடங்க மறு, கோமாளி) சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், இயக்குநர் ரத்னகுமார் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு ‘பூமி’ படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தனர்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘தமிழன் என்று சொல்லடா’-வை தயாரிப்பு நிறுவனம் ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் ‘ஜெயம்’ ரவி ஃபேன்ஸுக்கு சூப்பரான பர்த்டே ட்ரீட்டாக அமைந்தது. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளாராம். சமீபத்தில், படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற OTT தளத்தில் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தற்போது, படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
Make way for @actor_jayamravi‘s #BhoomiTrailer!
Hit play here
https://t.co/eB28bFy7Xg@immancomposer @dirlakshman @AgerwalNidhhi @theHMMofficial @sujataa_HMM @DisneyplusHSVIP #BhoomiForPongal #Bhoomi pic.twitter.com/Z31cotvm1c
— Sony Music South (@SonyMusicSouth) December 26, 2020