ஃபேன்ஸுக்கு ‘ஜெயம்’ ரவி கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட் என்ன தெரியுமா?

  • September 1, 2020 / 07:01 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி ‘ஜெயம்’ ரவியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு ‘பூமி’ படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘தமிழன் என்று சொல்லடா’-வை அன்று ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’-ஏ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. கண்டிப்பாக இப்பாடல் ‘ஜெயம்’ ரவி ஃபேன்ஸுக்கு சூப்பரான பர்த்டே ட்ரீட்டாக இருக்கப்போகிறது. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.