‘ஜெயம்’ ரவி போலீஸாக நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர்… விரைவில் OTT-யில் ரிலீஸாமே!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் (அடங்க மறு, கோமாளி) சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், இயக்குநர் ரத்னகுமார் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் ‘ஜெயம்’ ரவி நடித்து 2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘போகன்’ படத்தை தெலுங்கில் இதே பெயரில் டப் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘ஜெயம்’ ரவி போலீஸாக நடித்துள்ள இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். ஹன்ஷிகா மோத்வானி ஹீரோயினாக வலம் வந்த இப்படத்தினை லக்ஷ்மன் இயக்கியிருந்தார். இன்று இதன் தெலுங்கு வெர்ஷன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இப்படம் OTT-யில் ரிலீஸ் செய்யப்படுமாம்.

Share.