‘ஜெயம்’ ரவி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கோமாளி’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • May 28, 2022 / 02:09 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. முதல் படத்துலேயே தன் நடிப்பால் அசரடித்து, ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அந்த படம் தான் ‘ஜெயம்’. ‘ஜெயம்’ ஹிட்டானதும் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’ என்ற படத்தில் நடித்தார். இதுவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதும், ‘ஜெயம்’ ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, அஹமத்தின் ‘ஜன கண மன’, கல்யாண கிருஷ்ணனின் ‘அகிலன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கோமாளி’. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் இதனை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஷாரா, வினோதினி வைத்யநாதன், பிரவீனா, ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.65 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus