‘ஜெயம்’ ரவியின் சைக்கோ த்ரில்லர் படமான ‘இறைவன்’… வெளியானது புது ட்ரெய்லர்!

  • September 25, 2023 / 05:56 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘இறைவன், சைரன், ஜீனி, தனி ஒருவன் 2’ மற்றும் இயக்குநர் எம்.ராஜேஷ் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இறைவன்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஐ.அஹமத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ராகுல் போஸ், ஆசிஷ் வித்யார்த்தி, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஹரி.கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜே.வி.மணிகண்டா பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சைக்கோ த்ரில்லர் படமான இதனை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் புது ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus