‘ஜெயம்’ ரவி படத்தை தயாரிக்கும் அட்லி… இயக்குநராகிறார் பிரபல எழுத்தாளரின் மகன்!

  • July 30, 2020 / 11:28 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2 என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், நடிகர் ‘ஜெயம்’ ரவியின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்திருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லி அவரது ‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ சார்பில் தயாரிக்கவிருக்கிறாராம்.

இதனை அட்லியின் உதவி இயக்குநர் ஒருவர் தான் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. தற்போது, அந்த இயக்குநரின் பெயர் சூர்யா பாலகுமாரன் என்று தகவல் கிடைத்துள்ளது. இவர் ‘ஜென்டில் மேன், நாயகன், பாட்ஷா’ போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus