‘ரஜினி, விஜய்’ பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் ‘ஜெயம்’ ரவி!

  • August 6, 2020 / 01:05 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2 மற்றும் இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இப்போது ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, நடிகர் ‘ஜெயம்’ ரவியின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய தமிழ் படம் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் அவரது ‘ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கவிருக்கிறாராம். வெகு விரைவில் இப்படத்தை இயக்கப்போகும் இயக்குநரின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய்யின் 65-வது படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus