தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘சைரன், ஜீனி, தனி ஒருவன் 2, பிரதர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘சைரன்’ படத்தை இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார், செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் நடத்தவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.