ஜெயம் ரவி நடிப்பில் “டெடி” OTTயில் வெளிவருமா?

  • July 11, 2020 / 11:33 AM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம்ரவி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “டெடி”. இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

ஜூன் 5 2020 அன்று வெளியிடவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இந்த படம் ஓடிடியில் வெளிவரும் என்று செய்தி வந்தது.

ஆனால் அதை முழுவதுமாக மறுத்துள்ள இந்த படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், டெடி திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படும் என்றும், ஏற்கனவே இந்த படம் திரையரங்குகளுக்கு விற்பனையாகி விட்டது என்றும் கூறியுள்ளார். எனவே டெடி திரைப்படம் OTTயில் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் அவரது மனைவி சாயிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படத்தில் டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் “என் இனிய தனிமையே” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் ஒரு டெடிபியர் பொம்மை முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதால் இந்தப் படத்தை பற்றிய ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், சதீஷ், மகிழ்திருமேனி, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே இந்த படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus