கடந்த ஜூன் 19ஆம் தேதி ஊரடங்கு நேரத்தை மீறி கடையை திறந்து வைத்ததாக தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
பின்பு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள். இவர்களை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் தற்போது கிளைச்சிறையில் அடுத்தடுத்து இறந்தார்கள். இது மக்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதற்காக விசாரணை தற்போது நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் மக்கள் விசாரணை கைதிகள் உயிரிழப்பு தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பல சினிமா பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்காக ஆதரவு தெரிவித்து #justiceforJayarajandFenix என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டுள்ளார்.
#JusticeForJeyarajAndFenix No one is above the law, justice must be done for this inhuman act.
— Jayam Ravi (@actor_jayamravi) June 25, 2020
இவர்” சட்டத்தை விட உயர்ந்தவர் யாருமில்லை. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நீதி வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்.