64 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட வாரிசு பட நடிகை !
February 11, 2023 / 05:05 PM IST
|Follow Us
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஜெயசுதா. இவர் தெலுங்கு திரை உலகில் பிரபலாமான நடிகை .ஜெயசுதா தனது 12 வயதில் கமல்ஹாசனுடன் 1972 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பண்டாண்டி கபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1975 இல், அவர் தெலுங்கு திரைப்படமான லக்ஷ்மண ரேகாவில் முன்னணி நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஜோதி என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாண்டியன்’ படத்தில் அவரது சகோதரியாக நடித்து இருந்தார் . ஜெயசுதா முதலில் வட்டே ரமேஷை திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவர்களின் உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை, சில எதிர்பாராத காரணங்களால் விரைவில் அவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் 1985 ஆம் ஆண்டு நடிகர் ஜீதேந்திராவின் உறவினரான தயாரிப்பாளர் நிதின் கபூர் என்பவரை ஜெயசுதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நிதின் கபூர் மும்பையில் 2017-ம் ஆண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெயசுதா, தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்து இருந்தார் .
இந்நிலையில் தற்போது 64 வயதான நடிகை ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஜெயசுதா தரப்பில் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நடிகை தனது புதிய கணவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus