சூப்பர் ஹிட்டான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘RRR’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!
May 19, 2022 / 09:10 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.
இந்த படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் VFX BREAKDOWN வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.