Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

  • December 26, 2023 / 11:18 AM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவரா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கொரட்டாலா சிவா இயக்குகிறார்.

இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில், இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், முதல் பாகம் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 5-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. தற்போது, இப்படத்தின் GLIMPSE-ஐ வருகிற ஜனவரி 8-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus